சிசிஎல் (CCL) என்று அழைக்கப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியின் ஒன்பதாவது சீசன் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் இந்த கிரிக்கெட்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
வரும் பிப்ரவரி 18ஆம் தேதி பெங்களூருவில் தெலுங்கு வாரியர்ஸ் மற்றும் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் இடையே முதல் போட்டி பிற்பகல் 2 1/2 மணிக்கு துவங்குகிறது.
சென்னை ரைனோஸ் அணி சார்பில் கேப்டன் ஆர்யா தலைமையில் பரத், ஜீவா, விஜய் ஜேசுதாஸ், பிரித்திவிராஜ், ஆதவ் கண்ணதாசன், சாந்தனு உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரபல நடிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னை ரைனோஸ் அணியிலிருந்து விலகிய விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் மீண்டும் இந்த சீசனில் இணைந்துள்ளனர்.
சென்னை ரைனோஸ் அணி முதல் இரண்டு முறை சிசிஎல் கோப்பைகளை வென்றதுடன் 2015 ஆம் ஆண்டில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற உள்ள இந்த ஒன்பதாவது சீசனில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த நிலையில் தற்போது மும்பையில் இந்த சிசிஎல் 2023 காண இறை தூக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அத்தனை அணிகளும் பங்கேற்றனர்.
சென்னை ரைனோஸ் அணி பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 7 மணிக்கு இரண்டாவதாக நடக்கும் போட்டியில் கர்நாடகாவுடன் பெங்களூருவில் மோத உள்ளது. அதன்பிறகு ஜெய்பூரில் பிப்ரவரி 25ஆம் தேதி மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத்திலும் மார்ச் 11ஆம் தேதி சென்னையில் மோத உள்ளது.
மொத்தம் 16 போட்டிகள் நடத்தப்படுகிறது. லீக் ஆட்டங்களில் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இரு அரை இறுதி போட்டிகள் வரும் மார்ச்-18ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகின்றன.
இந்த புள்ளி பட்டியலில் முறையே ஒன்றாவது மற்றும் நாலாவது இடத்தை பிடித்த அணிகள் முதல் அரை இறுதியிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டாவது அறை இறுதியிலும் மோதுகின்றன.
இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் வரும் மார்ச் 19ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.