தமிழ் சினிமாவில் சிங்கம்-2, சர்தார், காரி என தொடர்ந்து ஹிட் படங்களை தயாரித்து வருபவர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமன் குமார். சமீபத்தில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் இவரது தயாரிப்பில் உருவாகி இருந்த ரன் பேபி ரன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பாசிட்டிவான விமர்சனங்களையும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது இந்த படத்தை மலையாள திரைப்பட இயக்குனரான ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் மீண்டும் இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமாருடன் இன்னொரு உற்சாகமான படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தப்படம் குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படாவிட்டாலும், நிச்சயமாக இயக்குனரிடம் இருந்து இன்னொரு உற்சாகமான படைப்பாக அது இருக்கும்.

இயக்குனர்கள் மனு ஆனந்த், ஆண்ட்ரூ லூயிஸ் ஆகியோர் இயக்கும் படங்கள் உட்பட மற்றும் சில படங்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வரிசை கட்டி நிற்கின்றன. எதிர்காலத்தில் நல்ல படைப்புகளை தருவதில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய உறுதியை தெரிவிக்கிறது