தனுஷ் முதன்முறையாக தெலுங்கு திரை உலகில் நுழைந்து நடித்துள்ள படம் வாத்தி. தெலுங்கில் சார் என்கிற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் இளம் இயக்குனரான வெங்கி அட்லூரி என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகியாக சம்யுக்தா நடிக்க முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க பள்ளிக்கூடம், கல்வி முறை இதைக் குறித்தே இந்த படம் உருவாகியுள்ளதை இந்த ட்ரெய்லர் அழுத்தமாக சொல்கிறது.
அது மட்டுமல்ல ஒரு அதிரடியான ஆக்சன் படம் இது என்பது தனுஷ் ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது. படம் வெளியாகும்போது நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.
ஏற்கனவே வா வாத்தி என்கிற பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த ட்ரெய்லரும் படம் குறித்தான ஆர்வத்தை ரசிகர்களிடம் இன்னும் அதிகப்படுத்தி உள்ளது.