லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் நடித்து வரும் படத்திற்கு லியோ என டைட்டில் வைத்து சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு கில்லி படத்தில் துவங்கி திருப்பாச்சி, குருவி, ஆதி என மொத்தம் நான்கு படங்களில் விஜய் உடன் இணைந்து நடித்துள்ள திரிஷா, ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐந்தாவது முறையாக விஜய் உடன் இணைந்து இந்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் விஜயின் 67வது படம் என்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் இந்த படம் திரிஷாவுக்கும் 67வது படம் என்பதுதான். இந்த ஒற்றுமை, இந்த மேஜிக் நம்பர் இருவருக்குமே இந்த லியோ படத்தில் ஆச்சரியமாக அமைந்துவிட்டது.
சமீபத்தில் காஷ்மீர் படப்படிப்பிலிருந்து திடீரென திரிஷா சென்னை திரும்பினார் என்கிற தகவல் வெளியானது. உடனே அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூட பல செய்திகளை பரப்ப ஆரம்பித்தார்கள். ஆனால் அங்கே கடும் குளிர் என்பதால் தான் அவர் டெல்லி திரும்பினார் என்றும் அவர் சென்னைக்கு வரவே இல்லை என்றும் அவரது அமாவே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தற்போது மீண்டும் அவர் காஷ்மீர் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் என்றும் உறுதியாகியுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றை திரிஷாவே வெளியிட்டு தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருவதை உறுதிப்படுத்தி, வதந்தி பரப்பியவர்களை வாயடைக்க செய்துவிட்டார்.