இயக்குனர் ராஜமவுலி முன்னணி ஹீரோக்களை தான் தனது படத்தில் இயக்குவார் என்று இப்போது கூட பெரும்பாலானோர் நம்பிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் தான் இயக்கிய மரியாத ராமண்ணா என்கிற படத்தில் அப்போது நகைச்சுவை நடிகராக நடித்து வந்த நடிகர் சுனிலை கதாநாயகனாக மாற்றி அந்த படத்தையும் வெற்றி படமாக மாற்றிக் காட்டினார்,
அதிலிருந்து சுனில் ஓரளவுக்கு தென்னிந்தியா முழுவதும் தெரிந்த முகம் ஆகிவிட்டார். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக நடித்து அதிலும் பெயர் பெற்றார்.
இதை தொடர்ந்து மற்ற தென்னிந்திய மொழிகளில் அவருக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது விஷால் எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்த வரும் மார்க் ஆண்டனி படத்திலும் சுனில் முக்கிய இடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
இந்த இரண்டு படங்கள் வெளியானால் சுனில் இன்னும் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய அளவில் தேடப்படும் நடிகராக மாறிவிடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.