V4UMEDIA
HomeNewsKollywoodதனுஷின் 50வது படம் ; சஸ்பென்ஸ் வைத்த சன் பிக்சர்ஸ்

தனுஷின் 50வது படம் ; சஸ்பென்ஸ் வைத்த சன் பிக்சர்ஸ்

தனுஷ் நடிப்பில் தற்போது தெலுங்கு, தமிழ் என இரு மொழியில் உருவாகி வரும் வாத்தி. வெங்கி அட்லூரி இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.  இந்தப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் என்கிற திரைப்படமும் 70களின் காலகட்ட பின்னணியில் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்கள் தவிர அதிகாரப்பூர்வமான தனுஷின் படங்கள் குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷ் நடிக்கும் ஐம்பதாவது படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தை யார் இயக்குகிறார்கள் ? கதாநாயகி உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப குழுவினர் விவரம் எதுவும் அறிவிக்கப்படாமல் ஒரு சஸ்பென்ஸ் உடன் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதே சமயம் துணிவு படத்தை இயக்கி முடித்த இயக்குனர் எச்.வினோத் அதன்பிறகு தனுஷ் படத்தை இயக்கப்போவதாக தனது பேட்டிகளில் கூறி வந்தார். அது ஏற்கனவே அஜித்துக்காக சொல்லப்பட்ட கதை என்றும் சதுரங்க வேட்டை படத்தை பிரம்மாண்டமாக எடுத்தால் எப்படி இருக்குமோ அது போன்ற ஒரு கதை என்றும் கூட அவர் ஒரு தகவலை தெரிவித்து இருந்தார்.

ஒருவேளை இது அந்த படமாகத்தான் இருக்குமோ என ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். விரைவில் இந்த சஸ்பென்ஸ் உடையும் என எதிர்பார்க்கலாம்.

Most Popular

Recent Comments