பக்கத்து வீட்டுப் பெண் போல பாந்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் கடந்த வருடம் பெரிய அளவில் படங்கள் வெளியாகவில்லை என்றாலும் இந்த வருடம் வெளியாவதற்காக உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நடித்துள்ள மாமன்னன் மற்றும் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் தசரா ஆகிய படங்கள் வரிசையில் காத்திருக்கின்றன.
இந்த நிலையில் சந்துரு என்பவர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படத்திற்கு ரிவால்வர் ரீட்டா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் கேரக்டர் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திர போஸ்டரை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார்
இதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். காரணம் இரண்டு கைகளிலும் துப்பாக்கி வைத்தபடி பழைய கௌபாய் படங்களில் காணப்படும் ஆக்சன் ஹீரோயின் போல இவரது கேரக்டர் லுக் உருவாக்கப்பட்டுள்ளது. தனது வழக்கமான பாணியில் இருந்து இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் புதிய ஒரு ரூட்டில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.