V4UMEDIA
HomeNewsKollywoodசலூன் படத்திற்காக உருவாக்கிய பொதிகை மலை நாடு

சலூன் படத்திற்காக உருவாக்கிய பொதிகை மலை நாடு

நடிகர் மிர்ச்சி சிவா நடிக்கும் படங்கள் என்றால் 100% காமெடிக்கு கேரண்டி என்று சொல்லலாம். கூடவே யோகிபாபுவும் சேர்ந்து கொண்டால் சொல்லவே தேவையில்லை. இப்படி ஒரு அதகளமான கூட்டணி சலூன் என்கிற படத்திற்காக இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் பிரதேசத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கன்னி ராசி, தர்மபிரபு ஆகிய படங்களை இயக்கிய முத்துக்குமரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் தாத்தா, பேரன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் சிவா. வெள்ளியார் ஆட்சி காலத்தில் முடி திருத்தம் தொழிலாளி கதாபாத்திரத்தில் தாத்தாவாகவும் இன்றைய நவீன கால இளைஞனாகவும் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ள மிர்ச்சி சிவா தாத்தா கதாபாத்திரத்தில் காமெடி இல்லாமல் சீரியஸ் நடிப்பை வழங்கியுள்ளார்.

தன்னுடைய காலத்தில் தாத்தா நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஆசைகளை பேரன் எப்படி இப்போதைய காலத்தில் நிறைவேற்றி வைக்கிறான் என்பதை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார் இயக்குனர் முத்துகுமரன். இதில் சுருளி என்கிற கதாபாத்திரத்தில் சிவாவின் நண்பராக நடிக்கிறார் யோகிபாபு

அதுமட்டுமல்ல இது அரசியலை கிண்டலை செய்யும் படமாக உருவாகியுள்ளதால் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காக பொதிகை மலை நாடு என்கிற கற்பனை நாட்டை உருவாக்கி அங்கே கதை நடப்பதாக படத்தை இயக்கியுள்ளார் முத்துக்குமரன்.

Most Popular

Recent Comments