நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘பி. டி. சார்’. இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மிரா பர்தேசி நடித்திருக்கிறார்.
இவர்களுடன் நடிகை அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த், ஆர். பாண்டியராஜன், இளவரசு, தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர். தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார் இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு பி.டி சார் எனக்கு டைட்டில் வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது
வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வேலன் அரங்கத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளி கிராமிய திருவிழா அரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் பொங்கல் திருவிழாவை கொண்டாடிய தருணத்தில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள்.
இதுபற்றி படத்தின் நாயகன் ஹிப் ஹாப் ஆதி கூறும்போது கல்லூரி வளாகத்தில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, கலை விழா.. என எந்த விழாவையும் நடத்தலாம். ஆனால் முதன்முறையாக தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருவிழா, கல்லூரி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெறுவது பாராட்டுக்குரியது. இன்றைய சூழலில் பண்டிகைகளை மக்கள் விசேடமாகக் கொண்டாடுவதில்லை.
ஆனால் பொங்கல் விழாவை, ஒரு திருவிழா போல் கொண்டாடுவது, தமிழ் உணர்வை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது போல் இருக்கிறது. இந்த எண்ணத்திற்கு பாராட்டுகள் என்று கூறினார்.