விஜய் படங்கள் என்றாலே அதிரடி ஆக்ஷன் படங்கள் அதிரடி நடனக்காட்சி கொண்ட படங்கள் என இளைஞர்களை கட்டிப்போடும் விதமான படமாக இருந்தாலும் அவரது படங்களில் பெரும்பாலும் குடும்ப உறவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் விதமாகவே பல படங்கள் வெளியாகி வந்திருக்கின்றன.
குறிப்பாக அப்படிப்பட்ட படங்கள் மூலம் தான் குடும்ப ரசிகர்களிடையே விஜய் எளிதாக சென்றடைந்தார். இந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படமும் இதேபோன்று தனது ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பு பார்வையாளர்களும் குடும்பத்துடன் வந்து பார்த்து ரசிக்கும் விதமாக ஒரு குடும்பப்பாங்கான கதையிலேயே நடித்துள்ளார் விஜய்.
இரண்டு அண்ணன்கள், அப்பா, அம்மா, அத்தை, மாமா என குடும்ப உறவுகளும் அவர்களுக்குள் நிலவும் சின்ன சின்ன பிரச்சனைகளும் துரோகமும் விவேகமும் என கலந்து இந்த படம் உருவாகி உள்ளதை சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லரிலேயே பார்க்க முடிந்தது.
அதுமட்டுமல்ல படத்தில் நடித்துள்ள ஸ்ரீகாந்த், ஷாம், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படம் குறித்து தங்களது பேட்டியில் கூறும்போது இந்த படம் குடும்ப உறவின் மேன்மையை எப்படி வலியுறுத்தி உருவாகி உள்ளது என்பது பற்றியே அழுத்தமாக கூறி வருகிறார்கள்.
அதனால் இந்த வாரிசு பொங்கலை அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடுவார்கள் என்று தாராளமாக எதிர்பார்க்கலாம்