V4UMEDIA
HomeNewsKollywoodசூறாவளியாய் சுழன்று அடிக்கும் வாரிசு டிரைலர்

சூறாவளியாய் சுழன்று அடிக்கும் வாரிசு டிரைலர்

இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித் நடித்துள்ள துணிவு என இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோதுவது என்பது உறுதியாகிவிட்டது. இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதுகின்றனவா அல்லது ஒருநாள் தள்ளித்தள்ளி வெளியாகின்றனவா என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் அஜித்தின் துணிவு ட்ரெய்லர் வெளியாகி அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தி மிகப்பெரிய அளவில் யூடியூபில் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனையும் செய்தது.

இந்த நிலையில் இன்று விஜயின் வாரிசு டிரைலர் வெளியாவதாக அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் பலமடங்கு ஆர்வத்துடன் இந்த ட்ரெய்லரை பார்ப்பதற்கு காத்திருந்தனர்.

அந்த வகையில் இன்று மாலை வெளியான இந்த ட்ரெய்லர் அஜித்தின் துணிவு டிரைலர் பார்க்கப்பட்ட வேகத்தை விட இருமடங்கு வேகத்தில் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

இதே வேகத்தில் சென்றால் நிச்சயம் இதுவரை வெளியான விஜய் பட டிரைலர்களின் சாதனைகளையும் இந்த வாரிசு பட டிரைலர் முறியடித்து விடும் என்கிறார்கள்.

இன்று ரோகிணி தியேட்டர் உட்பட தமிழகமெங்கும் உள்ள பல தியேட்டர்களில் இந்த டிரைலருக்கு என பிரத்தியோகமாக பிரமாண்ட திரை தியேட்டருக்கு வெளியே அமைக்கப்பட்டு ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக இந்த ட்ரெய்லர் திரையிடப்பட்டது.

சென்னையில் ரோகிணி தியேட்டரில் அப்படி வெளியிடப்பட்ட டிரைலருக்கு விஜய் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து பொதுமக்கள் பிரமித்து போனார்கள்.

நிச்சயம் இந்த பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் அனைவரையும் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வரவழைக்கும் என்பது ட்ரைலரை பார்க்கும்போதே தெரிகிறது.

Most Popular

Recent Comments