V4UMEDIA
HomeNewsKollywoodமுதல் திருவள்ளுவர் சிலையை பெற்றுக் கொண்ட விஜய்சேதுபதி

முதல் திருவள்ளுவர் சிலையை பெற்றுக் கொண்ட விஜய்சேதுபதி

சிலை என்கிற நிறுவனம் தமிழகத்தில் இல்லம் தோறும் திருவள்ளுவர் சிலை இருக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் மிக குறைந்த அளவிலான விலையில் திருவள்ளுவர் சிலைகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது இந்த சிலை ரூபாய் 499 இல் இருந்து 4 ஆயிரத்து 999 ரூபாய் வரை பல்வேறு அளவுகளில் கிடைக்கும் இத்திட்டத்தை அனைவருக்கும் பரப்பும் வகையில் நடிகர் விஜய்சேதுபதி இதன் முதல் சிலையை பெற்றுக்கொண்டார்.

இத்திட்டத்தில் 50,000வது சிலையை கன்னியாகுமரி வள்ளுவர் சிலையின் அடிவாரத்திலும், 1 லட்சமாவது சிலையை மயிலையில் ‘தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின்’ அவர்கள் கையால் மிகப்பெரும் விழாவில் வழங்கி வாங்குபவர்களை கௌரவிக்க உள்ளனர். அனைவருக்கும் பரிசாகவும் அளிக்க கூடிய இச்சிலைகள் WWW.SILAII.COM என்ற இணையதளத்தில் கிடைக்கும்.

தலைவர்கள், அறிஞர்கள், பிரபலங்களின் சிலைகளை புதிய தொழில்நுட்பத்தில் கல் சிலையாக வடிப்பதில் மிகப்புகழ்பெற்ற நிறுவனம் SILAII(சிலை) நிறுவனம் ஆகும்.

நம் மனித இனத்திற்கு உலகப்பொதுமறையாம் திருக்குறளை தந்த தத்துவஞானி “திருவள்ளுவர்” சிலையை ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையில் கொண்டு சேர்ப்பதன் மூலம், அவர் குறள் வழி வாழ்க்கையை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி, அவரது கருத்துக்களை பின்பற்ற வைக்கலாம் எனும் முயற்சியாக சிலை நிறுவனம் ‘இல்லம் தோறும் வள்ளுவர்’ திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

Most Popular

Recent Comments