மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நிவின்பாலி ஹீரோயிசத்தை தவிர்த்து வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதனாலோ என்னவோ கடந்த இரண்டு வருடங்களாக அவர் நடிப்பில் வெளியான லவ் ஆக்சன் ட்ராமா, கனகம் கலகம் காமினி, படவேட்டு உள்ளிட்ட படங்களில் அவர் உடல் சற்று பருமனாகவே இருந்தாலும் அதுபற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் நடித்து வந்தார்.

தற்போது தமிழில் ராம் இயக்கத்தில் நடித்து வரும் ஏழு கடல் ஏழுமலை படத்தில் கூட வெளியான அவரது தோற்றங்களில் சற்று பல்க்காகவே காணப்பட்டார் நிவின்பாலி.

இந்த நிலையில் தற்போது தனது உடல் எடையை கணிசமாக குறைத்து ரொம்பவே ஸ்லிம்மாக காட்சி அளிக்கிறார் நிவின்பாலி.

சமீபத்தில் புத்தாண்டுக்காக வெளியூர் பயணம் சென்று திரும்பிய போது எடுக்கப்பட்ட இவரது புகைப்படம் ஒன்றை இவரது நண்பரான நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ் பகிர்ந்து கொண்டு தன்னுடைய ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்