முன்னணி ஹீரோக்களை தேடி ஓடாமல் கதைக்கு தேவையான நடிகர்களை நோக்கி நகர்பவர் இயக்குனர் வெற்றிமாறன். இருப்பினும் தனக்கும் தன்னுடைய கதைகளுக்கு எப்போதுமே தோதாக அமைந்து விடும் நடிகர் தனுஷுடன் தான் தொடர்ந்து படங்களை இயக்கி வந்தார் வெற்றிமாறன்.

இந்த நிலையில் ஒரு மாற்றமாக நகைச்சுவை நடிகை நடிகர் சூரியை கதையின் நாயகனாக மாற்றி நடிகர் விஜய் சேதுபதியை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து விடுதலை என்கிற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். ஆச்சரியமாக இந்த படத்தின் கதை ரொம்பவே நீளமானது என்பதால் இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வந்தார் வெற்றிமாறன். இந்த நிலையில் தற்போது இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

இந்த படத்தின் முதல் பாகத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் தென்னிந்திய மொழிகள் நான்கிலுமே வெளியாக இருக்கிறது.

தமிழகத்தில் இந்த படத்தின் இரண்டு பாகங்களையும் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிட இருக்கிறது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் படத்தின் ரிலீஸ் தேதி உள்ளிட்டவை விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.