கடந்த 2009ல் பாண்டிராஜ் இயக்கத்தில் சசிகுமார் தயாரிப்பில் வெளியாகி தேசிய விருது பெற்ற படம் பசங்க. இந்த படத்தில் பள்ளி மாணவர்கள் ஆக கிஷோர், ஸ்ரீராம், பக்கோடா பாண்டி ஆகியவர்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்தில்தான் விமல் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த நிலையில் இந்த சிறுவர்கள் வளர்ந்து கிஷோர், ஸ்ரீராம் போன்றவர்கள் சில படங்களில் கதையின் நாயகர்களாக முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பசங்க கிஷோர் சீரியல் நடிகையான பிரீத்தி குமாரை தான் காதலித்து வரும் விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல விரைவில் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் பிரீத்தி குமாரின் பிறந்தநாளில் அறிவித்துள்ளார் கிஷோர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்கிற சீரியலில் அறிமுகமான பிரீத்தி குமார் அதைத்தொடர்ந்து கேளடி கண்மணி, வானத்தைப்போல, லட்சுமி கல்யாணம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.