ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த சூப்பர்ஹிட் படமான தாமிரபரணி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை பானு. தொடர்ந்து தமிழில் சில படங்களில் பரபரப்பாக நடித்தவர், அதன்பிறகு மலையாள திரை உலகிலேயே தஞ்சமடைந்தார்.
கடந்த 2015ல் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு கிட்டத்தட்ட ஒதுங்கியவர் அந்த சமயத்தில் பாம்புசட்டை, சகுந்தலாவின் காதலன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில் பாம்பு சட்டை படம் தான் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம். இந்த நிலையில் வெளிவராமல் முடங்கிக் கிடந்த சகுந்தலாவின் காதலன் திரைப்படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி ஒருவழியாக ரிலீஸ் ஆகிறது.
சுனைனாவை தமிழுக்கு அறிமுகம் செய்த காதலில் விழுந்தேன் படத்தை இயக்கிய பிவி பிரசாத் இந்த படத்தை இயக்கி உள்ளதுடன் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார்.
ஒரு திருடனிடம் தனது தங்கச்சங்கிலியை பறிகொடுத்த இளம்பெண் அதை அவனிடமிருந்து எப்படி மீட்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. அந்த வகையில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு தாமிரபரணி பானு இந்தப் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்று சொல்லலாம்.