V4UMEDIA
HomeNewsKollywoodவாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டிக்கதை

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டிக்கதை

விஜய் நடிப்பில் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி உள்ள திரைப்படம் வாரிசு. தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ள இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முதன்முறையாக விஜய்யின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் தமன்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் பேசும்போது வழக்கம்போல ஒரு குட்டிக்கதை சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்த முறை அன்பு செலுத்த வேண்டியதன் அவசியத்தை குறித்து அவர் குட்டிக்கதை ஒன்றை கூறினார். அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி அவர் கூறிய அந்த குட்டிக்கதை மனதைத் தொடுவதாக இருந்தது..

அதாவது அன்பான அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என்கிற குடும்பத்தில் தந்தை அந்த அண்ணன், தங்கைக்கு தினசரி சாக்லேட் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பார், தங்கை அதை உடனே சாப்பிட்டு விடுவாள். ஆனால் அண்ணன் அதை ஒரு இடத்தில் மறைத்து வைப்பதையும் தங்கை கண்டறிந்து எடுத்து சாப்பிட்டு விடுவார்.

ஒருநாள் அண்ணனிடம் அன்பு என்றால் என்ன என தங்கை கேட்டபோது நீ எப்படியும் எடுத்து விடுவாய் என்று தெரிந்தும் கூட நான் திரும்பத் திரும்ப அதே இடத்தில் சாக்லேட்டை வைக்கிறேன் இல்லையா.. அதுதான் அன்பு என்று அண்ணன் கூறுவார்.. அன்பு மட்டுமே உலகத்தை ஜெயிக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆயுதம்.. ரசிகர்களின் அன்பே எனக்கான போதை” என்று கூறியுள்ளார் விஜய்..

Most Popular

Recent Comments