சில கதாபாத்திரங்களை ஒரு சில ஹீரோக்கள் தான் செய்ய முடியும் என்பது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல மலையாள படங்களிலும் சரி மற்ற மொழி படங்களிலும் சரி பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த புலிமுருகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அந்த படம் மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதே தவிர யாரும் அதை ரீமேக் செய்து நடிக்க முன்வரவில்லை. அந்த அளவுக்கு அசுரத்தனமான உழைப்பைக் கொடுத்து இருந்தார் மோகன்லால்.
அப்படி ஒரு வலுவான கதையுடன் தற்போது அவரை தான் இயக்க உள்ள மலைக்கோட்டை வாலிபன் என்ற படத்தில் கதாநாயகனாக மாற்றியிருக்கிறார். மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. இவர் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற அங்கமாலி டைரிஸ், ஜல்லிக்கட்டு ஆகிய படங்களை இயக்கியவர்.
தற்போது மம்முட்டி நடிப்பில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தை முடித்த கையோடு மோகன்லாலை வைத்து தான் உருவாக்கியிருக்கும் மலைக் கோட்டை வாலிபன் படத்தை ராஜஸ்தான் பகுதியில் படமாக்க இருக்கிறார் இந்த படம் குஸ்தி விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது
ஆமென்’ படத்தின் கதாசிரியரான பி. எஸ். ரஃபிக் திரைக்கதை எழுதியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ராஜஸ்தானில் நடைபெறும் என்றும், இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் மோகன்லால் மல்யுத்த வீரராக நடிக்கிறார் என்றும் பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இப்போது புரிகிறதா மோகன்லாலை இந்த படத்திற்காக ஏன் தேர்ந்தெடுத்தார் என்று ?.