உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் மரணத்தை இயல்பாக எதிர்கொள்கின்றன. ஆனால் மனித இனம் மட்டுமே மரணம் குறித்து அஞ்சுகிறது. ஆனால் மரணம் பயப்பட வேண்டிய ஒன்று அல்ல. அது கெத்தாக எதிர்கொள்ளவேண்டிய ஒன்று என்கிற கருத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் டியர் டெத்.
வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ள இந்தத்திரைப்படத்தை பிரேம்குமார் என்பவர் இயக்கியுள்ளார். மாலையிட்ட மங்கை, போலீஸ்காரன் மகள் உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய பிரபல கன்னட இயக்குனர் பி.எஸ் மூர்த்தியின் பேரன் சதீஷ் நாகராஜன் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதியுள்ளார்.
இதுவரை இறப்பு என்றாலே நெகட்டிவ் ஆகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் சாவு என்பது பயப்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அது கம்பீரமானது.. இறப்பு ஒரு மனிதனாக நம்மிடம் பேசினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை.
அன்றாடம் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி அதேசமயம் நிஜத்தில் நடந்த நிகழ்வுகளையும் கொஞ்சம் கற்பனையையும் கலந்து இந்த படம் உருவாகி உள்ளது சந்தோஷ் பிரதாப் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமாக கதையை நகர்த்திச் செல்லும் கதாபாத்திரமாக நடித்துள்ளார்.