V4UMEDIA
HomeNewsKollywoodஆண் குழந்தைக்கு தாயானார் தயாரிப்பாளர் அன்புச்செழியன் மகள்

ஆண் குழந்தைக்கு தாயானார் தயாரிப்பாளர் அன்புச்செழியன் மகள்

தமிழ் சினிமாவில் பின்னணியிலிருந்து பொருளாதார ரீதியாக தாங்கிப்பிடிக்கும் பணிகளை செய்துவரும் வெகு சிலரில் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பாளர் அன்புச்செழியன் மிக முக்கியமானவர். இன்று பல படங்கள் தயாரிப்பதற்கும் வெளியாகும் மிகப்பெரிய அளவில் நிதி உதவி செய்து வருகிறார்.

அதுமட்டுமல்ல கோபுரம் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி அதன் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த நிறுவனத்தை அவரது மகள் சுஷ்மிதா சரண் கவனித்து வருகிறார். கடந்த வருடம் சுஷ்மிதாவுக்கும் ஐ.ஏ.எஸ் ராஜேந்திரன் மகன் சரணுக்கும் கடந்த பிப்ரவரியில் திருமணம் நடந்தது.

இந்நிலையில் இன்று (26-12-2022) திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சுஷ்மிதாவுக்கு சென்னை போரூரில் உள்ள ஶ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர். இதைத் தொடர்ந்து, திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

Most Popular

Recent Comments