வருடந்தோறும் நடைபெறும் சென்னை சர்வதேச திரைப்பட திருவிழா இந்த வருடம் வழக்கம்போல துவங்கி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த விழாவில் பல மொழிகளை சேர்ந்த திரைப்படங்கள் கலந்து கொண்டன. இந்த நிலையில் நேற்று இந்த திரைப்பட விழாவின் இறுதி நாள் நிகழ்வாக விருது பெற்ற கலைஞர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது.
இந்த சர்வதேச திரைப்பட விழாவில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் படத்தில் மிகச்சிறப்பாக நடித்த விஜய்சேதுபதி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த படம் கமர்சியல் அம்சங்கள் எதுவும் இல்லாமல் ஒரு கலை படைப்பாக உருவாகி இருந்ததால் தியேட்டர்களில் வெளியிடப்பட்டபோது பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.
அதே சமயம் இந்த படம் ஆகா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியானபோது அதிக அளவு ரசிகர்களால் பார்க்கப்பட்டு மிகப்பெரிய சாதனையையும் வசூலையும் குவித்தது. இந்தநிலையில் சிறந்த படத்திற்கான சர்வதேச விருந்து கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.