விஜய் மற்றும் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வழியாக உள்ள வாரிசு மற்றும் வாத்தி ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகை சேர்ந்தவர்களிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் இந்த இரண்டு படங்களுமே இவர்கள் இருவரும் முதன்முறையாக நேரடியாக தெலுங்கு திரை உலகில் நுழைந்து நடித்துள்ள படங்கள்.
தெலுங்கு தயாரிப்பாளர்கள், தெலுங்கு இயக்குனர்கள் என முழுக்க முழுக்க தெலுங்கு திரை உலகை சேர்ந்தவர்களின் தயாரிப்பில் இவை உருவாகி இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி தான் இந்த இரண்டு படங்களும் உருவாகியுள்ளது என சொல்லப்படுகிறது.
இதில் விஜய்யின் வாரிசு படம் பொங்கல் பண்டிகை வெளியீடாக வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தமிழகம் எங்கும் செவன் ஸ்கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.
அதேபோல தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்தையும் தமிழகத்தில் செவன் ஸ்கிரீன் நிறுவனம் தான் வெளியிடும் உரிமையை கைப்பற்றி உள்ளது.
அதுமட்டுமல்ல லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தையும் இதே நிறுவனம் தான் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.