டாக்டர், டான் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான பிரின்ஸ் படத்தில் ரசிகர்களை ஈர்ப்பதற்கு தவறினார். இதைத்தொடர்ந்து தற்போது தனது முழு கவனத்தையும் தான் நடித்து வரும் மாவீரன் திரைப்படத்தின் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.
மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வின் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார் இதில் மிஸ்கின் வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கார்ட்டூன் படங்களை உருவாக்கும் ஒரு கிராபிக் டிசைனர் ஆக நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கதாநாயகி அதிதி சங்கர் பத்திரிக்கை நிருபராக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.