சமீபத்தில்தான் கன்னடத்தில் உருவான காந்தாரா என்கிற திரைப்படம் தென்னிந்தியா மட்டுமில்லாமல் பாலிவுட்டையும் கூட ஒரு கலக்கு கலக்கியது. இந்தநிலையில் அதேபோன்ற டைட்டிலுக்கு இணையாக காந்தாரி என்கிற படம் சூட்டோடு சூடாக தமிழில் உருவாகிறது.
ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்குகிறார். இந்த படத்தில் ஹன்சிகா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்றில் நரிக்குறவர் சமுதாயத்தை பெண்ணாக நடிக்கிறார் ஹன்ஷிகா.
இந்த கதாபாத்திரம் இடம்பெறும் கதை 1940களில் நிகழ்வது போல உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 2023 பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ளது என்று இப்போதே அறிவித்துள்ளார் இயக்குநர் கண்ணன்.
தற்போது படப்பிடிப்பில் இருக்கும் இந்த படத்தில் ஹன்சிகாவின் கதாபாத்திரத்திற்கு மேக்கப் போடுவதற்கே 5 மணி நேரம் செலவாகிறது என்று சொல்லப்படுகிறது.