நடிகர் கௌதம் கார்த்திக் சமீபத்தில் தான் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகனை காதல் திருமணம் செய்து புது மாப்பிள்ளை ஆக மாறினார். இந்த நிலையில் திருமண பரபரப்பு முடிந்து மீண்டும் தனது பணிகளை தொடங்கியுள்ளார் கௌதம் கார்த்திக்.

அந்த வகையில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக் நடித்துள்ள பத்து தல திரைப்படம் விரைவில் வெளிவர தயாராகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த படத்திற்கு தனது டப்பிங் பணிகளை துவங்கிய நடிகர் கௌதம் கார்த்திக் தற்போது டப்பிங் பேசி முடித்துள்ளார்.

இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒபிலி கிருஷ்ணா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.