V4UMEDIA
HomeNewsKollywoodடிசம்பர் சென்டிமென்ட் மீண்டும் பிரபு சாலமனுக்கு கைகொடுக்குமா ?

டிசம்பர் சென்டிமென்ட் மீண்டும் பிரபு சாலமனுக்கு கைகொடுக்குமா ?

மைனா, கும்கி, காடன் என கிராமத்து மனிதர்கள் சார்ந்த கதைகளையும் காடு சார்ந்த களங்களையும் மையமாக வைத்து வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் பிரபுசாலமன். முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கி வந்த பிரபு சாலமன், தற்போது நடிகை கோவை சரளா கதையின் நாயகியாக நடித்துள்ள செம்பி என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அஸ்வின் குமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் கமல் தலைமையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபு சாலமன் இயக்கி மிகப்பெரிய வெற்றிபெற்ற கும்கி, அதன்பிறகு வெளியான கடல் ஆகிய படங்கள் எல்லாமே டிசம்பர் மாதத்தில் தான் வெளியாகின. அந்த வகையில் இந்தச் செம்பி படமும் டிசம்பர் மாதம் வெளியாவது சென்டிமென்டாக பிரபு சாலமனுக்கு ஒர்க் அவுட் ஆகும் என நம்பலாம்.

இந்த படத்தில் ஒரு சமூகப் பிரச்சினையை கையில் எடுத்துள்ள பிரபுசாலமன் அதை பாட்டி பேத்தி என்கிற உறவுகளின் ஊடாக சொல்லியிருக்கிறார். இந்த படத்தில் கோவை சரளா இதற்கு முன் நடித்திராத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்திலும் உருவ தோற்றத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments