தமிழ் சினிமாவில் தலைசிறந்த நட்சத்திரங்களான எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த் ஆகியோர் நடித்த படங்களை ரீ ரிலீஸ் செய்வது தற்போது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு மறுபடத்தொகுப்பு செய்யப்பட்டு வெளியாகி வெற்றியும் பெற்றது.
இதனை தொடர்ந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த உழைத்து வாழ வேண்டும் என்கிற திரைப்படம் ரீ ரிலீஸ் செய்வதற்கு தயாராகி வருகிறது. வரும் ஜனவரி 17-ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்த நாளன்று இந்த படம் திரைக்கு வருகிறது.
1974 இல் வெளியான இந்தப்படத்தை எஸ்.எஸ்.பாலன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் எம்ஜிஆர். கதாநாயகியாக நடிகை லதா நடித்திருந்தார்.
முக்கிய வேடங்களில் நம்பியார், ஐசரி வேலன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த படத்திற்கு எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார்/ இந்த படம் வெளியான சமயத்தில் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின என்பது குறிப்பிடத்தக்கது.