V4UMEDIA
HomeNewsKollywoodதிருப்பதி ஏழுமலையானையும் கடப்பா தர்காவையும் அடுத்தடுத்து தரிசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

திருப்பதி ஏழுமலையானையும் கடப்பா தர்காவையும் அடுத்தடுத்து தரிசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த வருடத்தில் அவரது பிறந்த நாள் சிறப்பு கொண்டாட்டமாக கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த பாபா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது.

இந்த நிலையில் தற்போது ஏழுமலையான் தரிசனத்திற்காக மகள் ஐஸ்வர்யாவுடன் திருப்பதி சென்றிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். காலை சுப்ரபாத சேவையில் போது ஏழுமலையானை தரிசித்தார் ரஜினிகாந்த்.

அதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஆமீன் பீர் தர்காவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் சென்று பிரார்த்தனை மேற்கொண்டார் ரஜினிகாந்த்.

ஒரே சமயத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும் கடப்பா ஆமீன் தர்காவிற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி சென்று பிரார்த்தனை செய்தது குறித்து பலரும் தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாலும் எம்மதமும் சம்மதமே எனும் கொள்கை உடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதை செய்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்றே அவரது ரசிகர்கள் பெருமிதத்துடன் கூறி வருகிறார்கள்.

Most Popular

Recent Comments