விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புவரை தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தற்போது ஒரு சிறிய இடைவெளி விழுந்து விட்டது போன்ற ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. அதேசமயம் தற்போது அதிக அளவில் படங்களில் நடித்து வரும் ஹீரோவும் அவர்தான்.

இந்த நிலையில் அவர் நடித்து வரும் தமிழரசன் திரைப்படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது .

பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து முக்கிய வேடத்தில் மலையாள முன்னணி நடிகர் சுரேஷ் கோபியும் நடித்துள்ளார்.

கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்க மற்றும் முக்கிய வேடங்களில் சோனு சூட், முனீஸ்காந்த், சங்கீதா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் ஒரு பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது.