கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான படம் அவதார். இந்த படம் உலகெங்கிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தியாவில் இந்த படத்திற்கு என ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் முன்பை விட பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது. வரும் டிசம்பர் 16ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ள இந்தப்படம் தமிழகத்தில் தென்னிந்திய மொழிகள் நான்கிலும் மற்றும் இந்தியிலும், கூடவே ஆங்கிலத்திலும் என ஆறு மொழிகளில் வெளியாகிறது.

கிட்டத்தட்ட இந்த படம் 52,000 ஸ்கிரீன்களில் வெளியாக உள்ளது இது உலக அளவில் மிகப்பெரிய சாதனை. அதே சமயம் இந்தப் படம் ரசியாவில் வெளியாகவில்லை என்பது இந்த படத்திற்கு கிடைத்த ஒரு சோதனை என்று சொல்லலாம்.

இருந்தாலும் இப்பொழுது அமெரிக்காவில் முன்பதிவில் மட்டும் மிகப்பெரிய அளவில் இந்தப் படம் வசூலித்துள்ளது. எப்படியும் அவதார் படம் வசூலித்த போல பல மடங்கு இந்த படம் வசூலிக்கும் என்கிறார்கள்