ஆன்ட்டி இந்தியன் என்கிற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்குனராக மாறி இயக்கியுள்ள படம் தான் உயிர் தமிழுக்கு. கடந்த சில வருடங்களுக்கு முன்பே நாற்காலி என்கிற பெயரில் துவங்கப்பட்ட இந்த படம் தான் தற்போது உயிர் தமிழுக்கு என்கிற பெயரில் விரைவில் வெளியாவதற்கு தயாராகி உள்ளது. இந்தப்படத்தி மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார்.

இந்த படத்தில் அரசியல்வாதியாக அமீர் நடித்துள்ளார் கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், ராஜசிம்மன், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் நடித்த ராஜ் கபூர் பேசும்போது இந்த படத்தில் அமீரும் இமான் அண்ணாச்சியும் நடித்துள்ள காட்சிகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும்.. சொல்லப்போனால் சத்யராஜ், கவுண்டமணி போல ஒரு காமெடி கூட்டணியாக இந்த படத்திற்குப் பின் இவர்கள் பேசப்படுவார்கள் என்று கூறினார்.

இயக்குனர் அமீர் பேசும்போதும் இதை குறிப்பிட்டு இமான் அண்ணாச்சியும் நானும் நடித்துள்ள காட்சிகள் கலகலப்பாக இருக்கும் படத்தில் எங்களது கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது சிவகார்த்திகேயன், சூரியை போல எங்களது கூட்டணிக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும். அப்படி வெற்றி கிடைத்தால் தொடர்ந்து நாங்கள் இணைந்து நடிக்கவும் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இப்படி இவர்கள் இந்த படத்தின் காமெடி காட்சிகள் குறித்து மிகப்பெரிய காமெடி கூட்டணி நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டு பேசி உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது என்று சொல்லலாம்..