90களில் ரிலீசான திரைப்படங்களில் சில ஆச்சரிய நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. குறிப்பாக 1992ல் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியான படங்களில் கௌதமி நடித்த இரண்டு படங்கள், பானுப்பிரியா நடித்த இரண்டு படங்கள், குஷ்பூ நடித்த மூன்று படங்கள் என ஒரே சமயத்தில் அதுவும் பிரபல முன்னணியின் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்த அதிசய நிகழ்வு நடந்தது.
அதன்பிறகு அதுபோன்ற நிகழ்வுகள் ரொம்பவே அரிதாகிவிட்டது. இந்தநிலையில் ஸ்ருதிஹாசன் அதேபோன்ற ஒரு ஆச்சரிய நிகழ்வை வரும் 2023 சங்கராந்தி பண்டிகையின்போது நிகழ்த்த இருக்கிறார்.
ஆம். ஸ்ருதிஹாசன் நடித்த இரண்டு படங்கள் ஒரே சமயத்தில் சங்கராந்தி பண்டிகை அன்று ரிலீஸ் ஆக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தெலுங்கு சினிமாவில் இரண்டு எதிர் துருவ ஜாம்பவான்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா இருவருடனும் இந்த படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது இதில் இன்னும் ஹைலைட்டான விஷயம்.
சிரஞ்சீவி நடிப்பில் வால்டர் வீரய்யா என்கிற படத்திலும் பாலகிருஷ்ணன் நடிப்பில் வீரசிம்ஹா ரெட்டி என்கிற படத்திலும் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்
ஸ்ருதிஹாசன். இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு ஸ்ருதிஹாசனுக்கு லாபமாக அமையும் என நம்பலாம்.