Home News Kollywood ரத்தம் படத்திற்காக ரசிகர்களை தயார்படுத்த விஜய் ஆண்டனிக்கு உதவும் மூன்று முன்னணி இயக்குனர்கள்

ரத்தம் படத்திற்காக ரசிகர்களை தயார்படுத்த விஜய் ஆண்டனிக்கு உதவும் மூன்று முன்னணி இயக்குனர்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது கிட்டத்தட்ட ஐந்து படங்களுக்கு மேல் தயாராகி வருகின்றன. அதில் ஒன்றுதான் சி.எஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் ரத்தம்.

தமிழ் படம் மூலமாக ரசிகர்களிடம் நன்கு அறிமுகமான சி.எஸ் அமுதன் வழக்கமான காமெடி பாணியில் இருந்து விலகி ஆக்சன் படமாக இந்த ரத்தம் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு தமிழ் படத்திற்கு இசையமைத்த கண்ணன் தான் இசையமைத்துள்ளார். கதாநாயகிகளாக மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தநிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 90 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசரில் பிரபல இயக்குனர்களான வெங்கட் பிரபு, வெற்றிமாறன், மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் இந்த படத்தின் கதை ஓட்டத்தை ரசிகர்களுக்கு எளிதாக கடத்தும் விதமாக அவர்களை இந்த படத்திற்கு தயார்படுத்தும் விதமாக விவரிக்கின்றனர். இதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.