பொழுதுபோக்கு படங்களுக்கு 100% உத்தரவாதம் தரக்கூடிய வெகுசில இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. அந்தவகையில் கடந்த நவம்பர் 5ஆம் தேதி இவரது இயக்கத்தில் காபி வித் காதல் என்கிற திரைப்படம் வெளியானது.
வழக்கமான தனது பொழுதுபோக்கு பாணியிலிருந்து சற்று புதிய முயற்சியாக ஒரு பீல்குட் படத்தை தரும் நோக்கத்துடன் இந்த படத்தை உருவாக்கியிருந்தார் இயக்குனர் சுந்தர் சி. ஓரளவுக்கு அவரது இந்த புது ஐடியா ரசிகர்களிடம் ஒர்க்கவுட் ஆகவே செய்தது.
இளம் ஹீரோக்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், இவர்களுடன் அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, சம்யுக்தா, திவ்யதர்ஷினி (டிடி) உள்ளிட்ட பல கலர்ஃபுல் நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்திற்கு பாடல்களால் அழகு சேர்த்திருந்தார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
இந்த நிலையில் வரும் டிசம்பர் ஒன்பதாம் தேதி முதல் இந்த படம் ஜீ தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
190 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளவர்கள் இந்த படத்தை ஓடிடி தளம் மூலமாக பார்த்து ரசிக்க முடியும்.