பழைய வண்ணாரப்பேட்டை என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. அதேசமயம் அதற்குப்பின் அவர் இயக்கிய திரவுபதி படம் தான் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி அவரை வெளிச்சம் போட்டுக்காட்டியது. அதன்பிறகு அவர் இயக்கிய ருத்ரதாண்டவம் படமும் கூட ஜாதிகளை மையமாக வைத்து என்ன விதமான பித்தலாட்டங்கள் நடக்கின்றன என கோடிட்டு காட்டியது.
இந்த நிலையில் தற்போது அவர் பகாசூரன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் நேற்று இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் மூன்று நிமிட ட்ரெய்லர் தற்போது வெளியாகி தன் பங்கிற்கு அதுவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ட்ரெய்லரில் சிவலிங்க பூஜையில் தொடங்கும் டிரைலரில் ஆங்காங்கே செல்வராகவன் காட்டும் ஆக்ரோஷமும், நட்டி வெளிப்படுத்தும் ஆங்காரமும் மிரட்டுகிறது. ஒருவனின் கழுத்தை திருகிப்போட்டுவிட்டு கடலை கொறித்தபடி செல்வராகவன் அசால்டாக நடந்துவரும் காட்சி அசத்தல்.
சமீபகாலமாக பள்ளி, கல்லூரிகளில் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள் அதன் பின்னணி பற்றிய விசாரணை உட்பட நிகழ்கால நிஜத்தின் முகம் டிரைலரிலேயே பிரதிபலிப்பது ‘பகாசூரனை’ பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. விரைவில் படம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை பற்றவைத்துள்ளது ‘பகாசூரன்’ டிரைலர். படம் இம்மாதம் திரையரங்குகளில் வெறியாக இருக்கிறது