V4UMEDIA
HomeNewsKollywoodரத்தன் டாடாவின் சுயசரிதையை படமாக்கவில்லை ; சுதா கொங்கரா விளக்கம்

ரத்தன் டாடாவின் சுயசரிதையை படமாக்கவில்லை ; சுதா கொங்கரா விளக்கம்

இறுதிச்சுற்று, சூரரைப்போற்று என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து தென்னிந்திய அளவில் முன்னணி இயக்குனராக உருவெடுத்த சுதா கொங்கரா, அந்த வரவேற்பால் தற்போது பாலிவுட்டில் அக்ஷய்குமார் நடிப்பில் மீண்டும் சூரரைப்போற்று படத்தை ரீமேக் செய்து இயக்கி வருகிறார்.

இந்த படத்தை முடித்ததும் அவர் அஜித் படத்தை இயக்க உள்ளார் என ஏற்கனவே சொல்லப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக சூரரைப்போற்று படத்தில் ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கிய ஜிஆர் கோபிநாத் என்பவரின் சுயசரிதையை இவர் படமாக்கினார்.

அதுபோல அடுத்ததாக இந்தியாவின் பிரபல முன்னணி தொழிலதிபரான ரத்தன் டாட்டாவின் வாழ்க்கை வரலாற்றை இவர் படமாக்க உள்ளார் என்கிற தகவல் கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் பரவி வந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சுதா கொங்கரா, “நான் ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகை ஆனாலும் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் எண்ணம் எதுவும் இந்த சமயத்தில் எனக்கு இல்லை.. ஆனால் நீங்கள் அனைவரும் என்னுடைய அடுத்த படம் குறித்து இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கு நன்றி” என்று தனது புதிய பட வதந்தி குறித்து . வைத்துள்ளார் சுதா கொங்கரா.

Most Popular

Recent Comments