சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் ஒன்று வெளியானால் எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு நிலவுமோ அந்த அளவுக்கு தற்போது வெளியாகியுள்ள பாபா பட ட்ரெய்லருக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. வெளியான ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வைகளை தாண்டி மிகப்பெரிய அளவில் சாதனை செய்துள்ளது பாபா ட்ரெய்லர்.
இந்த படம் 2003 இல் வெளியானபோது கலவையான விமர்சனங்களை சந்தித்துடன், சில அரசியல் பிரச்சினைகள் காரணமாக அப்போது ரசிகர்களாக இருந்தவர்கள் கூட இந்த படத்தை ரசித்து பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது.
அதுமட்டுமல்ல படத்தில் சில காட்சிகளை நீக்கி இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் கருத்து நிலவியது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தற்போது இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இந்த படத்தை மீண்டும் மறு படத்தொகுப்பு செய்து பிரஷ்ஷான படமாக ரசிகர்களுக்கு தர இருக்கின்றனர்.
இதுகுறித்த அறிவிப்பை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் அன்று தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.