தமிழ் சினிமாவை பொறுத்தவரை நயன்தாரா படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால் அதற்கென ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அவரது படம் வெளியாகும் நாளில் தியேட்டர்களில் ஓரளவுக்கு கூட்டம் அலை மோதவே செய்யும்.
இன்னொரு பக்கம் மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிரேமம் படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். தமிழிலும் அந்த படம் இன்றளவும் ரசிகர்களுடன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அப்படிப்பட்ட இயக்குனர் 7 வருடங்களுக்கு பிறகு இயக்கியுள்ள படம் கோல்டு. அந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். கதாநாயகனாக பிரித்திவிராஜ் நடித்துள்ளார். அந்தவகையில் அனைவருமே தமிழுக்கு நன்கு தெரிந்தவர்கள் தான். இந்த படம் தற்போது நேற்று கேரளாவிலும் இன்று தமிழகத்திலும் வெளியாகி உள்ளது.
ஆனால் படத்திற்கான எந்த ஒரு விளம்பரமும் பெரிய அளவில் செய்யப்பட.வில்லை அதனால் பல பேருக்கு இப்படி ஒரு படம் வெளியாகிறதா என்கிற தகவல் கூட சரியாக சென்று சேரவில்லை. இதனால் கேரளாவிலும் சரி, தமிழகத்திலும் சரி,, இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு ரசிகர்கள் கூட்டம் வரவில்லை என்பதை சோசியல் மீடியா பக்கம் மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது.
இவ்வளவு பெரிய படத்திற்கு ஓரளவிற்காவது புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தால் இன்னும் படம் வரவேற்பு பெற்றிருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த படத்திற்கு எந்த விதமான வரவேற்பு கிடைத்தது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.