நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்கிற படம் மூலமாக திரையில் ரசிகர்களை சந்திக்க வருகிறார். வடிவேலுவின் திரையுலக பயணத்தில் வசனங்களாலும் காட்சிகளாலும் தனது மிக முக்கியமான பங்களிப்பை கொடுத்தவர் இயக்குனர் சுராஜ். அவர்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது/

இதுவரை 2.5 மில்லியன் பார்வையாளர்கள் இந்த ட்ரெய்லரை பார்த்து ரசித்துள்ளனர். இந்த நிலையில் யூட்யூப் தளத்தில் நாய் சேகர் ட்ரெய்லர் வெளியாகியுள்ள பக்கத்தில் ரசிகர்கள் அந்த ட்ரெய்லர் குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்வதற்கு வசதியாக இருந்த கமெண்ட் ஆப்ஷனை தற்போது இந்த ட்ரெய்லரை வெளியிட்டு உள்ள சன் டிவி தளம் ஆப் செய்து வைத்துள்ளது.

ட்ரெய்லர் வெளியானபோது இந்த ட்ரெய்லர் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் ட்ரெய்லர் குறித்து எதிர்மறை கருத்துக்களே நிறைய பரப்பப்பட்டதால் அது இந்த படத்திற்கு தேவை இல்லாத பின்னடைவை கொடுத்து விடும் என்பதால் கமெண்ட்டுகளை ஆப் செய்து விட்டதாக சொல்லப்படுகிறது.