ஒரு நடிகராக சசிகுமாரின் படங்கள் அடுத்தடுத்து சமீபகாலமாக வெளியாகி வருகின்றன. அந்தவகையில் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான நான் மிருகமாய் மாற படத்தில் சவுண்ட் என்ஜினியராகவும் கடந்த வாரம் வெளியான காரி படத்தில் குதிரை ஜாக்கி ஆகவும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இதில் காரி படத்தில் ஜல்லிக்கட்டு வீரராகவும் வீரம் காட்டினார். இருந்தாலும் சசிகுமார் கிட்டத்தட்ட ஒரே பாணியிலான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று பொதுவாகவே சொல்லப்பட்டு வருவதை மறுக்க முடியாது.

இந்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக புதிய அவதாரம் எடுத்துள்ளார் சசிகுமார். அடுத்து அவர் புதிதாக நடிக்க உள்ள நந்தன் திரைப்படத்தில் அவரது வித்தியாசமான தோற்றத்துடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட்லுக் மிரட்டலாக இருக்கிறது.

இந்த படத்தை நான் சரவணன் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு புகழ்பெற்ற சுருதி பெரியசாமி நடிக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.