Home News Kollywood ஏ.ஆர்.ரகுமான் படம் பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ஏ.ஆர்.ரகுமான் படம் பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

கடந்த 30 வருட காலமாக தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். மணிரத்னம் ஷங்கர் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களில் தவறாமல் தொடர்ந்து தனது பங்களிப்பை தந்து வரும் ஏ.ஆர்.ரகுமான் சமீபகாலமாக இந்திப்பக்கம் செல்வதை தவிர்த்து தமிழ் படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி இசையமைத்து வருகிறார்.

இது ஒருபக்கம் இருக்க அவருக்குள் இருக்கும் படைப்பாளன் விழித்துக்கொண்டு தற்போது ஒரு இயக்குனராக அவரை மாற்றியதால் லேமஷ்க் என்கிற படத்தை அவர் இயக்கியுள்ளார்.

37 நிமிடம் ஓடக்கூடிய ஒரு குறும்படமாக உருவாகியுள்ள இதை ஏ.ஆர் ரகுமானே தயாரித்து இயக்கி இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.