தமிழ் சினிமாவில் எண்பதுகளின் மத்தியில் இருந்து 90களின் கடைசி வரை நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்தவர் கவுண்டமணி. இவற்றில் ஒருபக்கம் செந்திலுடன் இணைந்து தனி டிராக்கில் பயணித்தாலும் இன்னொரு பக்கம் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் சமமான கதாபாத்திரத்தில் நடித்தும் ரசிகர்களை தனது நகைச்சுவையால் மகிழ்வித்தார்.
இரண்டாயிரத்துக்கு பிறகு வடிவேலு, விவேக் இருவரின் ஆதிக்கம் ஓங்கியதாலும் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டும் படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/12/goundamani-3.jpg)
இடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாய்மை, 49-ஒ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என மூன்று படங்களில் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்தார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/12/goundamani-5-1024x768.jpg)
அதன்பிறகு கிட்டத்தட்ட ஆறு வருடம் ஆகிவிட்ட நிலையில், தற்போது ‘பழனிச்சாமி வாத்தியார்’ என்கிற படத்தின் மூலமாக கதாநாயகனாக மீண்டும் களமிறங்குகிறார் கவுண்டமணி.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/12/goundamani-4-768x1024.jpg)
இந்தப்படத்தை செல்வ அன்பரசன் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் குறித்து குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.