சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மலையாள நடிகை நடிகர் விநாயகன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இதில் நடிகர் ரோபோ சங்கர் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை.

தற்போது ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ரோபோ சங்கர் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தனது இருபதாவது திருமண நாளை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எனது ரஜினியிடம் தனது குடும்பத்தினருடன் இணைந்து வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார் ரோபோ சங்க.ர்

இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன