V4UMEDIA
HomeNewsKollywoodராம்சரணின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராம்சரணின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ஆர்ஆர்ஆர். ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இருவரும் இணைந்து நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ராம்சரண் யாருடைய படத்தில் நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் மிகப்பெரிய இயக்குனர்களை ஒதுக்கிவைத்துவிட்டு உப்பென்னா என்கிற ஒரே ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் புஜ்ஜி பாபு சேனா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான உப்பென்னா படத்தில் நடிகர் விஜய்சேதுபதியை வில்லனாக நடிக்க வைத்து தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தந்தது இவர்தான்.

அதேபோல அந்த படத்தின் மூலம் நடிகை கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments