Home News Kollywood அரசியல் அரங்கில்  பரபரப்பை ஏற்படுத்திய கட்சிக்காரன் ட்ரெய்லர்

அரசியல் அரங்கில்  பரபரப்பை ஏற்படுத்திய கட்சிக்காரன் ட்ரெய்லர்

அரசியலை மையப்படுத்தி இதற்கு முன்னதாக பல படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி இருந்தாலும் சமீப நாட்களாக தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக பெரும்பாலும் அரசியல் படங்கள் எடுப்பது என்பது குறைந்துவிட்டது. அதனால் பிரபல நடிகர்களே அப்படி அரசியல் படத்தில் நடிக்க தயங்கி வந்த நிலையில் கிட்டத்தட்ட புதுமுகங்கள் என்கிற நிலையில் இருக்கிற ஒரு படக்குழுவினர் கட்சிக்காரன் என்கிற பெயரிலேயே ஒரு படத்தை எடுத்துள்ளனர்.

தற்போது அந்த படத்தில் இருந்து வெளியாகியுள்ள டிரைலர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த டிரைலரில் இடம் பெறும் அரசியல் சாட்டையடி வசனங்கள் அரசியல் கட்சி தலைவர்களிடம் மட்டுமல்லாமல் சாதாரண கடைநிலை தொண்டர்களிடமும் கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

தோனி கபடிகுழு’ படத்தை இயக்கிய ப. ஐயப்பன் தனது இரண்டாவது படமாக ‘கட்சிக்காரன் ‘படத்தை இயக்கி உள்ளார்.இப்படத்தில் விஜித் சரவணன் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவர் தோனி கபடிகுழு, வேட்டைநாய் , படங்களில் நடித்தவர்.  ஸ்வேதா டாரதி கதாநாயகி.

 ”காதல் முன்னேற்ற கழகம்’ படத்தில்  வில்லனாக நடித்த சிவசேனாதிபதி அரசியல் தலைவராகவும் காமெடியனாக AR தெனாலி, அப்புக்குட்டி,  அசுரவதம் படத்தின் இயக்குநர் மருதுபாண்டியன், நாசரின் தம்பி  ஜவகர் ,விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன்,வின்சென்ட் ராய், குமர வடிவேலு,மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி,நந்தகுமார், சக்திவேல் முருகன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒரு கட்சித் தொண்டன் என்பவன் விசுவாசிதானே தவிர அடிமை அல்ல.அன்புக்காக வந்து நிற்பான். ஆனால் உரிமைக்காகக் குரல் கொடுப்பவன் என்கிற ரீதியில் இந்தப் படம் உருவாகி உள்ளது.

தொண்டர்களைக் கட்சித் தலைவர்கள் எப்படி நடத்துகிறார்கள்? அவர்கள் செயல்பாடுகள் எப்படி உள்ளன? என்பதைப் பற்றிக் கூறுகிறது இந்தப் படம். ட்ரெய்லரில் இடம்பெறும் சில வசனங்கள் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உருவாகி உள்ளது