தமிழ் சினிமாவில் நடிகர் தனுசுக்கு மட்டும் தமிழை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடிவரும் மாயாஜாலம் நடக்கிறது. இந்த நிலையில் தெலுங்கில் முதல் முதலாக அடி எடுத்து வைத்து வாத்தி என்ற படத்தில் நடித்துள்ளார் தனுஷ், வெங்கி அட்லூரி என்பவர் இயக்கியுள்ள இந்த படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்த நிலையில் தனது இரண்டாவது தெலுங்கு படத்தையும் துவங்கிவிட்டார் தனுஷ். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். இந்த படத்துக்கான துவக்க விழா பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக நடிகை சாய் பல்லவிக்கு தெலுங்கில் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு பெரிய வெற்றிகளை கொடுத்த பிதா மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய படங்களை இயக்கியவர் இந்த சேகர் கம்முலா தான் என்பது குறிப்பிடத்தக்கது.