V4UMEDIA
HomeNewsKollywoodஉலகெங்கிலும் உள்ள 100 இசைக்கலைஞர்களுடன் வதந்திக்கு துணைநின்ற சைமன் கே கிங்

உலகெங்கிலும் உள்ள 100 இசைக்கலைஞர்களுடன் வதந்திக்கு துணைநின்ற சைமன் கே கிங்

சமீபகாலமாக திரைப்படங்களுக்கு இணையாக வெப் தொடர்களும் ரசிகர்களை கவர்ந்து தங்கள் பக்கம் இழுத்து வருகின்றன. அந்தவகையில் அடுத்ததாக நடிகர் எஸ்ஜே சூர்யா முதன்முறையாக நடிக்கும் ஒரு வெப் தொடராக உருவாகி உள்ளது வதந்தி.

இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரை எஸ்ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய, விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார், இந்த படத்தில் பின்னணி இசை அமைத்துள்ளார் சைமன் கே கிங்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதற்காக, 100 இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து வதந்தியின் முழு ஒலிப்பதிவுக்கும் இசையமைத்துள்ளார். வதந்தி, வலைத் தொடருக்காக பிரத்தியேகமாக ஒரு வகையான டைட்டில் ட்ராக் இயற்றியுள்ளார். இந்தப் பாடலின் வரிகளை எழுதிய பாடலாசிரியர் கு கார்த்திக், பண்டைய தமிழ் இலக்கிய உரையைப் பயன்படுத்தியுள்ளார்.

மேலும் 40 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவைச் சேர்ந்த பாடகர் குழு டைட்டில் ட்ராக்கை வழங்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப வல்லுநர்களும் இதற்கு பங்களித்துள்ளனர்,

மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் “பேப்பர் ராக்கெட்” எனும் தனது வெற்றிகரமான பணிக்குப் பிறகு, சைமன் K கிங் *வதந்தி* யில் தனது அற்புதமான இசையைப் பகிர்ந்து கொள்வதை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் கருதுகிறார்.

நிச்சயம் இந்த வதந்தி வெப் தொடருக்கு சைமன் கே கிங்கின் இசை மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும் என்பது இப்போதே தெரிகிறது. வரும் டிசம்பர் 2ஆம் தேதி இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் இல் வெளியாக இருக்கிறது.

Most Popular

Recent Comments