தமிழ் திரையுலகில் இளம் நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன். இவர்கள் இருவரும் தேவராட்டம் என்கிற படத்தில் இணைந்து நடித்தபோது நண்பர்களாக மாறி, பின்னர் வந்த நாட்களில் பரஸ்பரம் தங்கள் காதலை பரிமாறிக் கொண்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவலையும் இந்த காதல் ஜோடி முறைப்படி அறிவித்தனர்.

இந்த நிலையில் இன்று (நவம்பர் 28-ஆம் தேதி) இவர்களது திருமணம் சென்னையில் எளிய முறையில் இரு விட்டார்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது.

மணமக்களுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கார்த்திக்கின் மகனாக ஒரு வாரிசு நடிகராக கௌதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்.

மஞ்சிமா மோகன் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஒரு வடக்கன் செல்பி படம் மூலம் கதாநாயகியாக மாறி தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் மூலமாக நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.