மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக பிஸியான நடிகையாக நடித்து வருபவர் நடிகை மஞ்சுவாரியர். இவரது பூர்வீகம் தமிழ்நாடு தான் என்றாலும் கேரளாவிலேயே செட்டில் ஆனதால் மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வந்தார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/05/thumb-manju-1024x576.jpg)
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அந்த முதல் படத்திலேயே அவரைப்பற்றி தெரிந்திராத தமிழ் ரசிகர்களின் நெஞ்சிலும் இடம் பிடித்தார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/09/02-ajith-manju-warrier.jpg)
தமிழில் தனது இரண்டாவது படமாக அஜித் குமாருக்கு ஜோடியாக துணிவு என்கிற படத்தில் நடித்துள்ளார். ஹெச்.வினோத் மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து இயக்கும் படம் இது.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/11/manju-2-1024x683.jpg)
இந்த படத்தில் மஞ்சுவாரியருக்கு சாகச காட்சிகள் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார் மஞ்சுவாரியர்.
ஏற்கனவே அவர் மலையாளத்தில் சில பாடல்களைப் பாடியிருந்தாலும் தமிழில் அவர் பாடும் முதல் பாடல் இது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/11/manju-1-1024x1024.jpg)
இந்த பாடல் பாடியது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மஞ்சுவாரியர். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்