எப்போதுமே பிரபல இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகள் என்றால் இங்கே நம் உள்ளூரை விட வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ரொம்பவே ஆர்வமாக இருப்பார்கள். காரணம் அங்கே அவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது இசைவடிவில் கண்ணுக்கு தெரியாமல் உலவும் தமிழ் பாடல்கள் தான்.

அந்த வகையில் இளையராஜா, ஏ.ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட ஜாம்பவான்கள் எல்லாம் வெளிநாட்டில் இசைக்கச்சேரி நடத்துகிறார்கள் என்றால் அரங்கத்தில் நிற்பதற்கு இடம் இருக்காது. அந்த அளவிற்கு இசை நிகழ்ச்சி களைகட்டும்.

அப்படி யுவன் ஷங்கர் ராஜாவின் 25 ஆண்டுகால இசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் மலேசியாவில் இருபதாயிரம் (20,000) யுவன் ரசிகர்கள் முன்னிலையில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம், ‘யுவன்25’ இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

‘மஹா’ திரைப்படத்தை தயாரித்ததோடு, ‘கபாலி’ ‘VIP 2’ போன்ற பல வெற்றிப்படங்களை விநியோகம் செய்த நிறுவனம் தான் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் .
*யுவன் 25* நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா, நேஹா பாசின், விஜய் யேசுதாஸ், ஜாவேத் அலி, ஸ்வேதா பண்டிட், டீஜே, சாம் விஷால், பிரியங்கா, விஷ்ணுப்ரியா ரவி மற்றும் தொகுப்பாளராக டிடி ஆகியோர் கலந்து கொண்டு பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

இந்த பிளாக்பஸ்டர் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் , தற்போது 21 ஜனவரி, 2023 (சனிக்கிழமை, மாலை 7 மணி) மலேசியாவில் நடக்கவிருக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் ‘ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ்’ ( Hearts Of Harris ) என்ற இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.